சீன-பிரேசில் உறவு பற்றிய பிரேசில் அரசுத் தலைவரின் கருத்து
2024-11-16 19:54:31

கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார மற்றும் வர்த்தகம், பண்பாடு உள்ளிட்ட பல துறைகளில், சீன-பிரேசில் ஒத்துழைப்பு உயர்வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய பசுமை வளர்ச்சி முறை மாற்றத்துக்கு வழிக்காட்டுவது, தெற்குலகத்தின் கருத்து வெளிப்பாட்டுரிமையை மேம்படுத்துவது ஆகிய துறைகளில் கூட்டாளிகளாக மாறியுள்ளன. இவ்வாண்டு நவம்பர் 18,19 ஆகிய நாட்களில், ஜி20 குழுத் தலைவர்களின் 19வது உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது.

இது குறித்து, பிரேசில் அரசுத் தலைவர் லூலா அண்மையில், சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்த போது கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ள ஜி20 குழுவின் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பது மிகவும் முக்கியமானது. அப்போது நாங்கள் இருவரும் முக்கியமான சந்திப்பு நடத்தி, நீண்டகால நெடுநோக்கு கூட்டாளி உறவின் உருவாக்கம் பற்றி விவாதிப்போம். பிரேசில்-சீனத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்டதற்கு பிறகு மிக முக்கியமான சந்திப்பாக இது திகழக்கூடும். நமக்குள் ஒத்தக் கருத்து உள்ளன. சீனாவுடன் இணைந்து, தத்தமது மேம்பாட்டைக் கொண்டுள்ள துறைகளில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் நேர்மையான உலகத்தை உருவாக்க நானும், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பாடுபட்டு வருகிறோம். ஆழமான நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்குவதன் மூலம், சீன-பிரேசில் வளர்ச்சிக்குப் பங்காற்றுவதோடு, உலக வளர்ச்சியையும் முன்னேற்றும். இரு நாடுகளுக்கிடையில், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, அரசுத் தலைவர்களின் பரிமாற்றம் ஆகியவற்றைத் தவிர, அரசு சாரா பரிமாற்றத்தையும் வலுப்படுத்த வேண்டும். பிரேசில்-சீன உறவு, மற்ற நாடுகளுக்கிடையிலான தொடர்புக்கு ஒரு முன்மாதிரியை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.