© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமம் தயாரித்த “பெருஞ்சுவரிலிருந்து மச்சு பிச்சு வரை” என்னும் ஆவணப்படத்தின் முதல் ஒளிப்பரப்பு நிகழ்வும், கியூசுவா மொழியிலான சமூக ஊடகத்தின் துவக்க நிகழ்வும் நவம்பர் 15ஆம் நாள் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங், பெரு நாட்டின் கஸ்கோ மாநிலத் தலைவர் லூயிஸ் பெல்ட்ரான் பாண்டோஜா கால்வோ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். பெரு நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவு, ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேலானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஷென் ஹாய்சியொங் கூறுகையில், “பெருஞ்சுவரிலிருந்து மச்சு பிச்சு வரை” என்னும் ஆவணப்படத்தின் முதல் ஒளிப்பரப்பு, சீன-பெரு மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும். பெரம் பரிமாற்றத்தை முன்னேற்றுவது, நம்பிக்கையைப் பரவல் செய்வது, புரிந்துணர்வை அதிகரிப்பது ஆகியவை, செல்வாக்கு வாய்ந்த சர்வதேச முக்கிய ஊடகமான சீன ஊடகக் குழுமத்தின் கடமைகளாகும். இந்த ஆவணப்படம், பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றிய கதைகளின் மூலம், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் கருத்தை எடுத்துக்கூறியுள்ளது. மேலும், கியூசுவா மொழியிலான சமூக ஊடகப் பக்கத்தின் மூலம், கியூசுவா மொழியைப் பயன்படுத்துகின்ற நண்பர்களுக்கு சீன வளர்ச்சி பற்றிய தகவல்களை அறிமுகப்படுத்த விரும்புகின்றோம் என்றும் தெரிவித்தார்.