© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலியுடன் நவம்பர் 15ஆம் நாள் பெரு நாட்டின் லிமா நகரில் சந்திப்பு நடத்தினார்.
வாங்யீ கூறுகையில், வேறுப்பட்ட அரசியல் அமைப்புமுறைகள் கொண்ட சீனாவும் கனடாவும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றியை நாட வேண்டும். கனடா, சீனாவுடன் இணைந்து செயல்பட்டு, சீன வளர்ச்சியைப் புறநிலையாக அணுகி, இரு தரப்புறவின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை முன்னேற்றும் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என அவர் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், சீனாவின் மின்சார வாகனங்களின் மீது கனடா கூடுதல் சுங்க வரி வசூலிப்பது, தாளார வர்த்தக எழுச்சியை மீறுவது, இரு நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு துணை புரியாது. உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி, சீனப் பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தைவான் பிரச்சினை, சீனாவின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது. ஒரே சீனா என்ற கோட்பாட்டை கனடா பின்பற்ற வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.
ஜோலி கூறுகையில், ஒரே சீனா என்ற கொள்கையில் கனடா ஊன்றி நின்று, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற பாடுபட்டு வருகிறது. சீனாவுடன் இணைந்து உயர்நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, கருத்து வேற்றுமையை உகந்த முறையில் கையாண்டு, உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பங்காற்ற கனடா விரும்புவதாக தெரிவித்தார்.