© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பெரு நாட்டின் அரசுத் தலைவர் டீனா பொலுஆர்டெ அம்மையாருடன், நவம்பர் 14ஆம் நாளிரவு, லிமா நகரிலுள்ள அரசுத் தலைவர் மாளிகையிலிருந்து காணொளி மூலம் சான்கே துறைமுகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
பெரு நாட்டில் ஷி ச்சின்பிங் அரசு முறை பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் இந்தத் துறைமுகத் திறப்பு விழாவில் கூட்டாக கலந்து கொள்வது, இரு நாட்டு மக்களின் நீண்டகால மற்றும் உறுதியான நட்புறவை வெளிப்படுத்தியுள்ளது.
500க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன், பெரு நாட்டின் இன்கா மக்கள், இன்கா பாதையைக் கட்டியமைத்தனர். தற்போது, சீன-பெரு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முக்கிய திட்டப்பணியான சான்கே துறைமுகம், தொன்மை வாய்ந்த இப்பாதைக்கு புதிய உயிராற்றலை ஊட்டியுள்ளது.
சான்கே துறைமுகத்தின் முதல் கட்டத் திட்டப்பணியின் மூலம், கடல் வழியாக பெரு நாட்டிலிருந்து சீனாவுக்குச் செல்லும் காலம் 23 நாட்களாக குறையும். மேலும், இது ஆண்டுதோறும் பெரு நாட்டுக்கு 450 கோடி அமெரிக்க டாலர் வருமானத்தை வழங்கி, 8 ஆயிரத்துக்கும் மேலான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. தவிரவும், விலங்குகளுக்கான மீட்பு நிலையங்கள், சதுப்பு நிலம், கடற்கரை உள்ளிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகள் உருவாக்கப்பட்டு, உள்ளூர் பொருளாதார மற்றும் சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது.
தற்போது, சீன நவீனமயமாக்கம் முன்னேற்றப்பட்டு வருகிறது. பெரு நாடும், பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி, எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் தொழில் துறை மேம்பாட்டை விரைவுப்படுத்தி வருகிறது. இரு தரப்பும் சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் கூட்டு வளர்ச்சி பற்றிய ஆர்வத்தை கொள்கின்றன. தெற்குலகத்தின் முக்கிய நாடுகளான சீனாவும் பெரு நாடும், பயனுள்ள ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது, வளரும் நாடுகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது.