பிரேசில் ஊடகத்தில் ஷி ச்சின்பிங்கின் பெயரிட்ட கட்டுரை வெளியீடு
2024-11-17 18:45:18

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ள ஜி20 குழு தலைவர்களின் 19வது உச்சி மாநாட்டில் பங்கெடுத்து, பிரேசிலில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் பெயரிட்ட கட்டுரை, உள்ளூர் நேரப்படி நவம்பர் 17ஆம் நாள் பிரேசிலின் ஃபோல்ஹா டி எஸ். பாவ்லோ(Folha de S. Paulo) என்னும் நாளேட்டில் வெளியிடப்பட்டது.

இக்கட்டுரையில் ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-பிரேசில் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்டு கடந்த 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சர்வதேச சூழலில் சீன-பிரேசில் உறவு பக்குவமடைந்துடன் இரு நாட்டு வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றியதோடு, உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளது என்றார்.

இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பில் ஊன்றி நின்று, தத்தமது மக்களுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதைக்கு ஆதரவளித்து வருகின்றன. பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுதலில் இரு தரப்பும் ஊன்றி நின்று, தத்தமது நவீனமயமாக்கப் போக்கினைக் கூட்டாக முன்னேற்றி வருகின்றன. மேலும், திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையில் இரு தரப்பும் ஊன்றி நின்று, இன்பமான வாழ்க்கை நாட பொது ஆர்வங்கள் கொண்டுள்ளன. அமைதியான வளர்ச்சி மற்றும் நேர்மையில் இரு தரப்பும் ஊன்றி நின்று, பல சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் ஒத்தக் கருத்துகள் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய உலகப் பின்னணியில், சீனாவும் பிரேசிலும் மேலும் நெருக்கமாக ஒன்றுபட்டு, இரு நாட்டு மக்கள் மற்றும் மனித குலத்துக்கான மேலும் இனிமையான எதிர்காலத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து, அவர் சில முன்மொழிவுகளை வழங்கினார்.

முதலாவதாக, சீன-பிரேசில் நட்புறவு என்ற திசையில் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவதாக, சீன-பிரேசில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புதிய இயக்காற்றலை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக, சீன-பிரேசில் மக்களின் நட்பார்ந்த அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். நான்காவதாக, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கும் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, ஜி20 குழு, சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய மேடையாகும். ஜி20 குழு, ஒன்றுக்கொன்று மதிப்பு, சமத்துவமான ஒத்துழைப்பு, பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய கோட்பாடுகளைக் கொண்டு, தெற்குலக நாடுகள் மேலும் பெரும் வளர்ச்சியடைவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், தொடரவல்ல உற்பத்தி மற்றும் வாழ்க்கை வழிமுறைக்கு வழிக்காட்டி, மனித குலத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கத்தை நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.