2026 APEC உச்சிமாநாடு நடத்தல் குறித்து செய்தியாளருக்குப் பதிலளிப்பு
2024-11-17 16:59:33

சீனா, 2026ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்தும் உரிமையைப் பெறுவது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 16ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் முக்கிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புமுறையாகும். சீனா எப்பொழுதும் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2001 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பின் உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டு உச்சி மாநாட்டை நடத்துவது பற்றி பல்வேறு நாடுகளுடன் தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, இப்பிரதேச மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய இயக்கு ஆற்றலை ஊட்ட சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.