© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 16ஆம் நாளன்று பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியில் 7 அம்ச அனுபவங்களைத் தொகுத்துக் கூறிய ஷிச்சின்பிங், அமெரிக்காவுடன் இணைந்து தொடர்ந்து பேச்சுவார்த்தையை நிலைநிறுத்தி, ஒத்துழைப்பை விரிவாக்கி, கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்த சீனா விரும்புகிறது என்று வலியுறுத்தினார். அதேவேளையில், இரு தரப்புகள் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவில்லை. சீனாவுக்கு எதிராக ‘புதிய பனிக் போரை’நாடாது, ‘தைவான் சுதந்திரத்தை’ ஆதரிக்காது ஆகிய அரசியல் வாக்குறுதிகளை பைடன் மீண்டும் தெளிவுபடுத்தினார். கடந்த 4 ஆண்டுகளில், சீன-அமெரிக்க உறவில் ஏற்றத்தாழ்வு நிலை காணப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த நிலை சீராக உள்ளது. 20-க்கும் அதிகமான தொடர்பு அமைப்புமுறைகள் மீண்டும் தொடங்கப்பட்டது அல்லது புதிதாக நிறுவப்பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, பொருளாதாரம் வர்த்தகம், படைப்பிரிவு, போதைப்பொருட்கள் ஒழிப்பு, மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் ஆக்கப்பூர்வமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
சரியான புரிதல், சிவப்புக் கோடு மற்றும் அடிப்படை கோடு மீது சவால் விடுக்காது, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பெரிய நாடுகளின் பொறுப்புகளை காட்டுவது உள்ளிட்ட 7 அம்ச அனுபவங்களை ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தையில் விளக்கிக் கூறினார்.
உலகின் மிக முக்கியமான இரு தரப்புறவாக இருக்கும் சீன-அமெரிக்க உறவு, மனிதகுலத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. இது குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். உலகின் அமைதி, பொதுவான வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகிய துறைகளில் சீனாவும் அமெரிக்காவும் சிறப்பான பொறுப்புகளை ஏற்கின்றன. எனவே, தற்போது கொந்தளிப்பு மிகுந்த உலகிற்கு உறுதித்தன்மை மற்றும் நேர்மறை சக்தியை வழங்க வேண்டும்.
சீனா மற்றும் அமெரிக்காவின் பொதுவான வளர்ச்சி மற்றும் தத்தமது செழுமை ஆகியவற்றுக்கு பூமியில் போதுமான இடங்கள் உண்டு. சீன-அமெரிக்க உறவில் பெறப்பட்ட முன்னேற்றம் எளிமையானது அல்ல. 2 மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும். ஒன்றுக்கு ஒன்று மரியாதை, அமைதியான சகவாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி அடைவது ஆகிய கோட்பாடுகளை இரு தரப்பும் தொடர்ந்து பின்பற்றி, சீன-அமெரிக்க உறவின் சுமூகமான மாற்றத்தை நனவாக்கி, புதிய யுகத்தில் சீனாவும் அமெரிக்காவும் சரியாக பழகும் வழிமுறையைத் தேடி கண்டுபிடிக்க விரும்புகிறது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் உலகிற்கும் நன்மை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.