© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள அரசுத்தலைவர் செயலகத்தில் அரசுத்தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இணை அமைச்சர்கள் பின்னர் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக நவம்பர் 14 ஆம் நாள் இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினருக்காக நடைபெற்ற தேர்தலில் இலங்கை அரசுத் தலைவரின் கட்சியான தேசிய மக்கள் கட்சி 159 இடங்களில் வென்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்தது.
இலங்கையின் பிரதமராகத் தொடர்ந்து பணியாற்றும் வகையில் புதிய அரசின் பிரதமராக அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவைப் பதவிப் பிரமாணத்தின் போது பேசிய இலங்கை அரசுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, இலங்கை மக்கள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செப்டம்பர் மற்றும் நவம்பர்த் திங்கள்களில் நடைபெற்ற இரு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வாக்களித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மக்கள் தங்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் உறுப்பினர்களின் நேர்மை மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளதாகவும், இனி அவர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அரசை எங்களின் செயல்பாட்டைக் கொண்டு மதிப்பிடலாம் எனவும் கூறினார்.