ஜி 20 குழுவின் உச்சி மாநாட்டில் சீனாவின் குரல் மீதான உலகின் எதிர்பார்ப்பு
2024-11-18 20:16:22

ஜி 20 குழுவின் தலைவர்களின் 19ஆவது உச்சி மாநாடு நவம்பர் 18, 19 ஆகிய நாட்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக, நடப்பு உச்சி மாநாட்டில் சீனா உலகிற்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச சமூகத்தில் நிலவி வருகின்றது.

ஜி 20 குழுவில் உலகின் முக்கிய வளர்ந்த பொருளார நாடுகளும், புதிதாக வளரும் நாடுகளும் இடம்பெறுகின்றன. ஜி 20 குழுவின் பொருளாதார அளவு, உலகின் மொத்த பொருளாதார அளவில் சுமார் 85 விழுக்காட்டினைக் கொண்டுள்ளது. ஜி 20 குழுவின் மக்கள் தொகை, உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியை வகிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தின் வலுவான, தொடரவல்ல, சமமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய முக்கிய மேடையாக ஜி 20 குழு மாறியுள்ளது.

ஜி 20 குழுவின் ஒத்துழைப்பின் கீழ் சீனா எப்போதும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு ஜி 20 குழுவின் உச்சி மாநாட்டின் தலைமை நாடான பிரேசிலின் முன்மொழிவின்படி உருவாக்கப்பட்ட பட்டினி மற்றும் வறுமை ஒழிப்புக்கான பணிக்குழுவில் வறுமை குறைப்புக் கொள்கை மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம் தொடர்பாக சீனா பலமுறை இதர தரப்புகளுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றது.

மேலும், புத்தாக்கத்துடன் கூடிய வளர்ச்சி, குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை வளர்ச்சிக்குச் சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரியாற்றலின் வளர்ச்சி முறை மாற்றம், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது முதலிய துறைகளிலான சர்வதேச ஒத்துழைப்புகளை ஆழமாக்க முன்னேற்ற வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகின் கரி குறைந்த பசுமையான வளர்ச்சி குறித்து விவாதிப்பது நடப்பு உச்சி மாநாட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாகும். உலகின் தொடரவல்ல வளர்ச்சிக்குச் சீனா மேலதிக இயக்கு ஆற்றலை உட்புகுத்தும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

ஜி 20 குழுவின் கட்டுக்கோப்புக்குள் உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதைச் சீனா எப்போதும் கருதி வருவதோடு மட்டுமல்லாமல், கூட்டாக விவாதித்து, கட்டியமைத்து அனுபவிக்கும் உலக மேலாண்மை கண்ணோட்டத்தில் ஊன்றி நிற்கிறது.

நடப்பு உச்சி மாநாட்டில், சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து விவாதித்து, சமமான ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கம், அனைவருக்கும் நன்மை பயத்தல், அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை கூட்டாக ஆதரிக்கும். அதோடு, பன்னாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கும், உலக மேலாண்மைக்கும் மேலதிக விவேகம் மற்றும் ஆற்றலை சீனா வழங்குவதென உலகம் எதிர்பார்க்கிறது.