சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி அறிக்கை வெளியீடு
2024-11-19 18:31:17

சீன மனித உரிமை ஆய்வகத்தின் ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி அறிக்கை அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின் பொதுப் பகுதியில் 2023ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு வெளிநாட்டு சூழ்நிலையை சீனா ஒருங்கிணைத்து, மனித உரிமை இலட்சியத்தின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான பொது நிலைமை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன்களை அதிகரித்து, பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு உரிமைகளின் உத்தரவாத நிலையை உயர்த்துவது, சட்ட அமலாக்கத்தை முன்னேற்றி, குடிமக்களின் உரிமை மற்றும் அரசியல் உரிமை உத்தரவாதத்தை வலுப்படுத்துவது, பல்வேறு குறிப்பிட்ட மக்கள் குழுக்கள், மனித உரிமையின் பயனைக் கூட்டாக அனுபவிப்பதை விரைவுபடுத்துவது முதலியவை குறத்து இந்த அறிக்கையில் முக்கியமாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.