தெற்குலக நாடுகளின் இளைஞர்கள் பற்றிய நடவடிக்கை
2024-11-19 10:29:37

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி 20 அமைப்பின் 19ஆவது உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்துகொண்டு, பிரேசில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம், ஜி 20 குழுவின் இளைஞர்கள் உச்சிமாநாடு மற்றும் பிரேசில் அரசுத் தலைவர் மாளிகையின் தலைமை செயலகத்துடன் இணைந்து நவம்பர் 18ஆம் நாள் ரியோ டி ஜெனிரோ நகரில் தெற்குலக நாடுகளின் இளைஞர்கள் நேருக்குநேர் என்ற ஊடக நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.

மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தைக் கைகோர்த்துக்கொண்டு உருவாக்குவது பற்றி தெற்குலக நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்களின் முன்மொழிவை 74 நாடுகளைச் சேர்ந்த 215 செய்தி ஊடகங்கள் கூட்டாக ஆதரித்து இதில் பங்கெடுத்தன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் கூறுகையில், உலகிலுள்ள ஒவ்வொரு இளைஞரின் கனவையும் பாதுகாக்க வேண்டும். மனிதகுலப் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கும் பகிரப்பட்ட தலைவிதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சியுடன் கூடிய அழகான உலகத்தை உருவாக்குவதற்கும் சீன ஊடகக் குழுமம் நல்ல கூட்டாளர்களுடன் இணைந்து பங்காற்ற விரும்புகின்றது என்றார்.