பிரான்ஸில் சீனாவின் டான் வம்ச காலம் பற்றிய கண்காட்சி துவக்கம்
2024-11-19 10:09:42

சீனா·டாங் வம்சம்——பன்முகத்தன்மை மற்றும் திறந்த  தன்மை வாய்ந்த காலம்(7முதல் 10ஆம் நூற்றாண்டு வரை)எனும் கண்காட்சி நவம்பர் 18ஆம் நாள் பிரான்ஸின் குய்மெட் அருங்காட்சியகத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோன் முறையே இக்கண்காட்சிக்கு முன்னுரையை எழுதினர்.

ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீன தேசத்துக்கும் பிரெஞ்சு தேசத்துக்கும் நீண்டகாலமான வண்ணமயமான பண்பாடு உண்டு. இரு நாட்டு மக்களிடையிலும் நீண்டகால நட்புறவும் உண்டு. வரலாற்றுப் பண்பாட்டிலிருந்து நாம் விழிப்புணர்வைத் தேடி சீன-பிரெஞ்சு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு மேலும் வலுவாகவும் உயிராற்றலாகவும் உருவாக்க வேண்டும் என்றார்.