© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் நவம்பர் 20ஆம் நாள் கூறுகையில், எல்லை கடந்த தரவு பரிமாற்றத்துக்கான உலகளாவிய ஒத்துழைப்பு முன்மொழிவை சீனா வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பல்வேறு தரப்புகளின் பொது அக்கறை கொண்ட எல்லை கடந்த தரவு மேலாண்மை பற்றிய விவகாரங்களுக்குச் சீனா பயனுள்ள தீர்வுகளை வழங்கி, எல்லை கடந்த தரவு பரிமாற்ற ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இம்முன்மொழிவின் அடிப்படையில், பல்வேறு தரப்புகளுடன் எல்லை கடந்த தரவு பரிமாற்றத்துக்கான ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், உலகத் தரவு பாதுகாப்பு முன்மொழிவை அடுத்து, சீனா முன்வைத்துள்ள மற்றொரு முக்கிய முன்மொழிவு இதுவாகும் எனக் குறிப்பிட்ட அவர், இணையத் துறையில் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது பற்றிய சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிந்தனையின் மைய உள்ளடக்கத்தை இது வெளிப்படுத்தியதோடு, வளர்ச்சிப் பாதுகாப்பு, எண்ணியல் மேலாண்மை, பலதரப்புவாதத்தின் நடைமுறையாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான சீனாவின் மனவுறுதியை இது காட்டியுள்ளது என்றும் லின்ஜியான் கூறினார்.