© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கடந்த சில நாட்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வுச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பொதுவான வளர்ச்சி மூலம் நியாயமான உலகத்தை கட்டியெழுப்புவது மற்றும் நியாயமான நேர்மையான உலகளாவிய நிர்வாக அமைப்புக்காக இணைந்து பணியாற்றுவது என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தியபோது, உலக நாடுகளின் பொதுவான வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கான முன்மொழிவுகளை முன்வைத்தார்.
சிறந்த வாழ்க்கை வாழ்வது, நவீனமயமாக்கலை நனவாக்குவது ஆகியவை, பல்வேறு நாட்டு மக்களின் பொதுவான இலக்குகளாகும். இதனிடையில், சீனா தனது 80 கோடி மக்களை வறுமை நிலையில் இருந்து விடுவித்துள்ளது என்ற கதை நமது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. உலகின் வறுமை ஒழிப்புப் பணியை முன்னேற்றுவதிலும், தெற்குலக நாடுகளின் வளர்ச்சி நம்பிக்கையை உயர்த்துவதிலும் இது பங்காற்றி வருகிறது. இதில் சீனா வெற்றி பெற முடியும் என்றால், பிற நாடுகளும் இதை நனவாக்க முடியும் என்பது மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
அனைவரும் கூட்டாக வளர்ச்சி அடைவது என்பது உண்மையான வளர்ச்சி ஆகும். இந்த கருத்து, சீனாவின் மாறாத நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, ஏழை மற்றும் பணக்காரர் இடைவெளி மேலும் அதிகரிப்பது என்ற அடிப்படையில் ஒரு செழுமையான உலகத்தை கட்டியெழுப்ப முடியாது. மாறாக, அனைவரையும் உள்ளடக்கும் மற்றும் பொது நலன் தரும் உலகளாவிய வளர்ச்சியை பல்வேறு நாடுகள் முன்னெடுக்க வேண்டும். உலக நிர்வாகம், மேலும் நியாயமான மற்றும் நேர்மையான திசையை நோக்கி செல்வதற்கு சீனாவின் இந்த முன்மொழிவுகள் துணை புரியும் என்று எதிர்பார்க்கிறோம்.