சீன-பிரேசில் உறவு பற்றிய கருத்து கணிப்பு
2024-11-21 11:16:08

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் பிரேசிலில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த CGTN, புதிய காலச் சர்வதேச தகவல் தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், பிரேசில் பொருளாதார மற்றும் சமூக சட்ட ஆய்வு மையத்துடன் இணைந்து கருத்து கணிப்பு ஓன்றை நடத்தியது.

இரு நாடுகள், பலதரப்பு மேடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் தெற்குலக நாடுகளின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் மிகவும் நியாயமான சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கும் அதிக உத்வேகத்தை அளித்துள்ளது என்று பதிலளித்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இக்கணிப்பு ஆய்வின் படி, சீனா ஒரு வெற்றிகரமான நாடாகும் என்று பதிலளித்தவர்களில் 91.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதார மீட்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது என்று 95.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று 93.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.