இலங்கையின் 10 ஆவது அமைச்சரவையின் அவைத்தலைவராக அசோகா ரன்வல தேர்வு
2024-11-21 18:59:18

இலங்கை நாடாளுமன்றத்தின் 10 ஆவது அமைச்சரவையின் முதல் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது, இதில், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அசோகா சபுமால் ரன்வல அவைத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவைத்தலைவர் பதவிக்காக அசோகா ரன்வலவின் பெயரைப் பிரதமர் ஹரிணி அமரசூர்யா முன்மொழிய, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேராத் வழிமொழிந்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஸ்வி சாலிஹ் புதிய அமைச்சரவையின் துணை சபாநாயகராகவும், ஹேமாலி வீரசேகர நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து இலங்கை அரசுத் தலைவர் அநுரகுமார திசநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சஜித பிரேமதாசாவை எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாக அவைத்தலைவர் அறிவித்தார்.