சீன மற்றும் பிரேசில் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
2024-11-21 11:15:09

இப்பேச்சுவார்த்தையின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுடன் நெடுநோக்குக் கூட்டாளி உறவை உருவாக்கிய முதல் நாடு பிரேசிலாகும். மேலும், சீனாவுடன் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவைக் கட்டியமைத்த முதலாவது லத்தீன் அமெரிக்க நாடு பிரேசில் ஆகும். இரு நாட்டு உறவை மேலும் நியாயமான உலகத்தையும் தொடரவல்ல பூமியையும் கூட்டாக உருவாக்கும் சீன-பிரேசில் பொது எதிர்காலச் சமூகமாக உயர்த்துவதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவைக் கூட்டாக செயலாக்குவதை பிரேசில் வளர்ச்சி நெடுநோக்குடனும் இணைக்கின்றோம். சீன-பிரேசில் உறவின் வளர்ச்சியில் இது மற்றொரு வரலாற்று தருணம் என்றார்.

எதிர்காலத்தில் இரு நாட்டு உறவு வளர்ச்சி பற்றி 4 முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார். முதலாவது, கூட்டு விதியை உருவாக்க வேண்டும். நெடுநோக்குடன் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, கூட்டு வளர்ச்சியாகும். வளர்ச்சியைத் தொடர்ந்து ஆழமாக்கி, நெடுநோக்கு பாதையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். மூன்றாவது கூட்டு பொறுப்பாகும். உலக அமைதி மற்றும் நீதியைப் பேணிக்காக்கும் வகையில், சீனா மற்றும் பிரேசிலின் வலிமையைக் காட்ட வேண்டும். நான்காவது இன்பங்களையும் துன்பங்களையும் கூட்டாக பகிர்ந்துகொண்டு மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்குச் சீனாவும் பிரேசிலுக்கும் பங்காற்ற வேண்டும் என்றார்.

இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மேலும் நியாயமான உலகத்தையும் தொடரவல்ல பூமியையும் கூட்டாக உருவாக்கும் சீன- பிரேசில் பொது எதிர்காலச் சமூகம் பற்றிய இரு நாட்டுக் கூட்டறிக்கையில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கூட்டாக கையொப்பமிட்டனர்.