© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரேசில் அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, 20 நாடுகள் குழுவின் 19ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பிரேசிலில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, உள்ளூர் நேரப்படி நவம்பர் 20ஆம் நாள், சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியின் தொடக்க விழா பிரேசிலியாவில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் க்ஷென் ஹை சியோங் கூறுகையில், இவ்வாண்டு சீனாவுக்கும் பிரேசிலுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு உறவை மேலும் நியாயமான உலகத்தையும் தொடரவல்ல பூமியையும் கூட்டாக உருவாக்கும் சீன-பிரேசில் பொது எதிர்காலச் சமூகமாக உயர்த்தும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரேசில் அரசுத் தலைவர் லுலா கூட்டாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷிச்சின்பிங்கின் முக்கியமான உரைகள், கட்டுரைகள் மற்றும் உரையாடல்களில் மேற்கோள் காட்டப்பட்ட பண்டைய சீன புத்தகங்கள் மற்றும் புகழ்பெற்ற வாக்கியங்கள், சீன நாகரிகத்தின் ஆழத்தையும் புதிய காலத்தில் சீனாவின் வளர்ச்சிக் கருத்துக்களையும் இந்நிகழ்ச்சி தெளிவாகக் காட்டுகிறன. ஷிச்சின்பிங் ஆட்சிமுறையின் சிறந்த ஞானத்தையும், மக்களை மையமாகக் கொண்ட ஆழ்ந்த உணர்ச்சிகளையும், சீனப் பண்பாட்டையும் சீன எழுச்சியையும் பிரேசில் மக்கள் புரிந்துகொள்வதற்கு இது துணை புரியும் என்றார்.