சீன-பிரேசில் உறவு குறித்த சீனாவின் விருப்பம்
2024-11-21 20:03:38

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம் நவம்பர் 21ஆம் நாள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் சீன-பிரேசில் உறவு குறித்து கூறுகையில், பிரேசிலுடன் இணைந்து, இரு நாட்டுறவின் யுக உள்ளடக்கத்தைச் செழிப்பாக்கி, உண்மையான பலதரப்புவாதத்தை உறுதியுடன் பேணிக்காத்து, வறுமைக்குப் பதிலாக வளர்ச்சி, பகைமைக்கு பதிலாக ஒத்துழைப்பு, மேலாதிக்கத்துக்குப் பதிலாக நியாயம் என்ற குரலை கூட்டாக எழுப்ப சீனா விரும்புவதாகத் கெரிவித்தார்.

மேலும், பிரேசிலில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பயணம் மேற்கொண்ட போது, சீன-பிரேசில் உறவை, மேலும் நியாயமான உலகம் மற்றும் தொடர்வல்ல பூமியைக் கொண்ட பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவதாக உயர்த்த இருநாட்டுத் தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். அதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் பற்றிய முன்மொழிவை, பிரேசிலின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்துடன் இணைப்பதாகவும் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் அறிவித்துள்ளதாக லின் ஜியான் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு சீன-லத்தின் அமெரிக்க மன்றம் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில், பிரேசில் உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து, சீன-லத்தின் அமெரிக்க ஒத்துழைப்பு புதிய காலக் கட்டத்தில் நுழைவதை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.