டிஜிட்டல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் சீனா சேர்வதற்கான பேச்சுவார்த்தை
2024-11-21 19:52:11

சீன வணிக அமைச்சகம் நவம்பர் 21ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, சீனாவுக்கும், டிஜிட்டல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் சேர்ந்த நாடுகளுக்கும் இடையிலான அமைச்சர் நிலை கூட்டம் நவம்பர் 14ஆம் நாள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவ்விரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெறப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அடுத்த கட்டப் பணித் திட்டங்கள் குறித்தும் பல்வேறு தரப்புகளும் ஆழமாக கருத்துகளைப் பரிமாற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான சீனப் பணிக்குழு 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 18ஆம் நாள் நிறுவப்பட்டது. இப்பணிக் குழுவின் கட்டுக்கோப்புக்குள், சீனா, இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்த நாடுகளுடன் 5 முறை அமைச்சர் நிலை கூட்டத்தை நடத்தியுள்ளது. வணிகம் மற்றும் வர்த்தக வசதிமயமாக்கம், டிஜிட்டல் உற்பத்திப் பொருட்களுக்கான சலுகை, தரவு விவகாரம், இணையப் பாதுகாப்பு, நுகர்வோர் நம்பிக்கை, புதிதாக வளரும் தொழில் நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பும் கருத்துகளைப் பரிமாறி, ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டத்தில், டிஜிட்டல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் சேர்ந்த நாடுகளுடன், பேச்சுவார்த்தை போக்கினை முன்னேற்றி, டிஜிட்டல் பொருளாதார ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர சீனா விரும்புவதாக சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.