© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 20ஆம் நாளிரவு பிரேசில் அரசுத் தலைவர் லூலா நடத்திய மாபெரும் வரவேற்பு விருந்தில் பங்கேற்றார்.
அரசுத் தலைவர் லூலா மற்றும் பிரேசில் மக்கள் வழங்கிய உற்சாக வரவேற்பு மற்றும் நட்பான உபசரிப்புக்கு ஷிச்சின்பிங் நன்றி தெரிவித்தார். அரசுத் தலைவர் லூலாவின் தலைமையில் பிரேசில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிச் சாதனைகளைப் பெறுவதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். புதிய துவக்க புள்ளியில் பிரேசிலுடன் இணைந்து சீன-பிரேசில் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தைக் கூட்டாக உருவாக்கப் பாடுபட்டு இரு நாட்டுறவின் அடுத்த பொன்னான 50 ஆண்டுகாலத்தைத் திறந்து வைக்கச் சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.