சீனச் சர்வதேச சுற்றுலா பொருட்காட்சி
2024-11-22 19:12:29

2024ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச சுற்றுலா பொருட்காட்சி நவம்பர் 22ஆம் நாள் ஷாங்காயிலுள்ள தேசியக் கண்காட்சி மையத்தில் துவங்கியது. 80க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான சர்வதேச வணிகர்களும், 600க்கும் மேலான வெளிநாட்டுச் சுற்றுலா வணிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

3 நாட்கள் நீடிக்கும் இப்பொருட்காட்சியில் உள்நாட்டுப் பண்பாடு மற்றும் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான தொழில் நுட்பம், தொல் பொருட்கள் மற்றும் அருங்காட்சியகத்துக்கான புத்தாக்கம், சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கான வசதிமயமாக்கம் மற்றும் சுற்றுலாச் சேவை, பண்பாடு மற்றும் சுற்றுலா அனுபவம், வெளிநாட்டுப் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆகியவை பற்றிய 6 சிறப்புக் காட்சியிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.