இவ்வாண்டின் முதல் 10 திங்களில் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை அதிகரிப்பு
2024-11-22 10:29:54

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் நவம்பர் 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. சீன வணிகத் துறை, சீன வெளியுறவு அமைச்சகம், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீன மத்திய வங்கி, சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் முதலியவற்றின் பொறுப்பாளர்கள், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் நிதானமான வளர்ச்சியை ஊக்குவிப்பது தொடர்புடைய கொள்கைகளை அறிமுகப்படுத்தி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

2024ஆம் ஆண்டு முதல் இது வரை, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சியில் ஒட்டுமொத்த அளவில் தர மிக்க மற்றும் நிலையான வர்த்தகத் தொகை கொண்ட முன்னேற்றப்போக்கு காணப்பட்டது. இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 36 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் சீனாவின் பங்கு நிதானமாக வளர்ந்து வருகிறது என்று சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தை பிரதிநிதியும் துணை அமைச்சருமான வாங் சௌவன் இதில் எடுத்துக்கூறினார்.