மொராக்கோ பட்டத்து இளவரசர் ஹசானுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
2024-11-22 18:34:13

உள்ளூர் நேரப்படி நவம்பர் 21ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரேசிலில் மேற்கொண்டிருந்த அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானம் மூலம் சீனாவுக்குத் திரும்பிய வழியில் மொராக்கோவின் கசப்லன்காவில் அந்நாட்டின் இளவரசர் ஹசானுடன் சந்திப்பு நடத்தினார்.

இச்சந்திப்பின் போது, சீன-மொராக்கோ உறவு சீராக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இரு தரப்புகளுக்கிடையேயான எதார்த்த ஒத்துழைப்பு அதிக பயன்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மொராக்கோ பேணிக்காப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது. மொராக்கோவுடன் இணைந்து தத்தமது மைய நலன் தொடர்பான விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க சீனா விரும்புகிறது. இரு தரப்புகள் பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரிவாக்கி, இரு நாட்டு நட்புறவுக்கான பொது மக்களின் விருப்பத்தை அதிகரித்து, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவு மேலும் வளர்ச்சியடைவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹசான் கூறுகையில், மொராக்கோ-சீன உறவு சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது. மொராக்கோ பேரரசு குடும்பமும் அரசும் இரு நாட்டுறவை வளர்க்க பாடுபட்டு வருவதோடு, சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் விரும்புகின்றன என்றார். சீன மொழி மற்றும் சீனப் பண்பாடு மொராக்கோ மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.