12வது சீன-ஐரோப்பிய மன்றக் கூட்டம்
2024-11-22 19:45:47

12வது சீன-ஐரோப்பிய மன்றக்கூட்டம் நவம்பர் 21ஆம் நாள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற்றது. புவியமைவு அரசியல் கட்டமைப்பின் மாற்றத்துடன், சீன-ஐரோப்பிய உறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்றுவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சீனா மற்றும் ஐரோப்பாவின் அரசியல், வணிகம் மற்றும் கல்வியியல் துறைகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் இணையத்தின் வழியிலும் நேரடியாகவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சீனாவும் ஐரோப்பாவும் கூட்டாளி உறவில் ஊன்றி நின்று, எதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, உலகின் நிலைத்தன்மையைக் கூட்டாக விரைவுபடுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீனாவின் தூதாண்மை குழுத் தலைவர் ட்செய் ழுன் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், சீனாவும் ஐரோப்பாவும் பலதுருவமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான இரண்டு சக்திகளாகவும், உலகமயமாக்கத்தை ஆதரிக்கும் இரண்டு சந்தைகளாகவும், பன்மைத்துவத்தை ஆதரிக்கும் இரண்டு நாகரிகங்களாகவும் இருக்கின்றன என்றும், சீன-ஐரோப்பிய உறவின் சீரான வளர்ச்சி, இரு தரப்புகளின் மக்களுக்கு மட்டுமல்லாது, உலகின் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழுமைக்கும் துணை புரியும் என்று தெரிவித்தார்.