விசா இல்லாத நாடுகளின் வரம்பை சீனா விரிவுபடுத்துகிறது
2024-11-22 16:28:44

நவம்பர் 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் பரிமாற்றத்துக்கு மேலதிக வசதி அளிக்கும் வகையில், 2024ஆம் ஆண்டின் நவம்பர் 30ஆம் நாள் முதல் 2025ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் நாள் வரை பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் ஜப்பான் முதலியவற்றைச் சேர்ந்த சாதாரண கடவுல்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத கொள்கை சோதனை செயல்படுத்தப்படவுள்ளது. இதைத் தவிர,

பரிமாற்ற மற்றும் தொடர்பைக் கருத்தில் கொண்டு பயணிப்பவர்களுக்கும் விசா இல்லாத நுழைவில் சீனா சேர்க்கும். விசா இல்லாத தங்குமிட காலத்தை தற்போதைய 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக நீட்டிக்கும் என்றார்.