© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பெரு நாட்டுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளைக் கொண்டு வரும் சான்கே துறைமுகத்தில் உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த துறைமுகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பெரு குடியரசுத் தலைவர் தீனா பொலுவார்த்தே சுட்டிக்காட்டினார்.
இது குறித்து சீன ஊடகக் குழுமத்துக்கு அண்மையில் அவர் அளித்த நேர்காணலில் மேலும் கூறியதாவது:
ஷென்சென் உள்ளிட்ட சீன நகரங்களுக்கு சென்றபோது, ஷென்சென், முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். இத்தகைய தொழில்நுட்பங்களை நாங்களும் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். சீனாவுடனான இரு தரப்புறவை ஆழமாக்க விரும்புகிறோம். சான்கே துறைமுகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சான்கே துறைமுகத்தால், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கிடையேயான பயண நேரம் மற்றும் செலவுகள் குறையும். இந்த துறைமுகத்தின் மூலம் பெரு நாடு மட்டுமல்லாமல், பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், அர்ஜென்டினா, சிலி உள்ளிட்ட அமெரிக்க கண்ட நாடுகளும் பயனடையும். எதிர்காலத்தில் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செயும் உலகின் முதல் நிலை நாடாக பெரும் மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.