காப் 29 மாநாடு காலநிலை நிதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது
2024-11-24 18:40:30

அஜர்பைஜானின் தலைநகரான பாகுவில் 24ஆம் நாள் காலையில் நடைபெற்ற காப் 29 என அழைக்கப்படும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உச்சி மாநாட்டில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான புதிய நிதி திரட்டல் இலக்கு, பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் உள்ள உலகளாவிய கார்பன் வர்த்தக சந்தை அம்சம் உள்ளிட்டவை குறித்து பல சாதனைகள் படைத்துள்ளன.

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 2035ஆம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு 30000கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்க உள்ளதாக இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட  புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.