ஒத்துழைப்பை விரிவாக்கும் சீன அரசுத் தலைவரின் பயணம்
2024-11-24 18:35:08

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 13முதல் 23ஆம் நாள் ஏபெக் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பெரு நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, ஜி-20 அமைப்பின் 19-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரேசிலில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் 11 நாட்கள் பயணங்களில், சுமார் 40 இரு தரப்பு மற்றும் பலதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். 60-க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார். பெரிய நாடுகளுக்கிடையேயான உறவுகளின் சீரான வளர்ச்சியை முன்னெடுப்பதோடு, தெற்குலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் வகையில் இந்த பயணம் அமைந்தது என்று தெரிவித்தார்.