© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனா சொந்தமாக வடிவமைத்து கட்டியமைத்த முதலாவது புதிய ரகப் பெரிய திரவ இயற்கை வாயு ஏற்றிறக்கல் கப்பல் நவம்பர் 25ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் வெளிநாட்டுப் பயனருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்கப்பல் புதிய கட்டமைப்புத் தொழில்நுட்பத்தால் கட்டியமைக்கப்பட்டுள்ளது. முன்பான ஒரே பெரியளவான திரவ இயற்கை வாயு ஏற்றிறக்கல் கப்பல்களை விட, மேலதிக சரக்குகளை இதில் ஏற்றிச்செல்ல முடியும். திரவ இயற்கை வாயு ஏற்றிறக்கல் கப்பலின் கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்தை இந்த கப்பல் ஒப்படைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உயர் தொழில்நுட்பம் மற்றும் உயர் கூடுதல் மதிப்பு கப்பல் சந்தையில், சீனக் கப்பல் துறையின் தகுநிலையையும் இது உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.