2ஆவது லியாங்ச்சு மன்றம் தொடக்கம்
2024-11-25 15:12:39

சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம், சீனத் தேசிய தொல் பொருள் ஆணையம், ஷெச்சியாங் மாநில அரசாங்கம் முதலியவை கூட்டாக நடத்திய 2ஆவது  லியாங்ச்சு மன்றம் நவம்பர் 25ஆம் நாள் துவங்கியது.

பரிமாற்றம், கூட்டுப் பகிர்வு, மனிதக் குலத்தின் புதிய வடிவம் என்பது இம்மன்றத்தின் தலைப்பாகும். 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், படைப்பாளர்கள், இசை அறிஞர்கள் உள்ளிட்ட 300க்கும் மேலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இதில் பங்கெடுத்தனர்.

5000 ஆண்டு வரலாறுடைய சீனாவின் நாகரீகம் என்ற அடிப்படையில், நாகரிகப் பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பகிர்வு ஆராய்ச்சி குறித்து இதில் ஆழமாக விவாதிக்கப்பட்டன. பல்வேறு நாடுகளின் பண்பாட்டுத் துறையினர்கள் கைகோர்த்துக்கொண்டு முயற்சி செய்து, உலக நாகரிக முன்மொழிவுக்கான பொது கருத்துக்களை எட்டக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.