பிரதேச மோதலில் சிரியா சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்: ஐ.நா சிறப்புத் தூதர் வேண்டுகோள்
2024-11-25 10:28:13

மத்திய-கிழக்கு பகுதியில் பதற்றமான நிலைமையைத் தணிவுபடுத்தி சிரியா பிரதேச மோதலில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதைத் தவிர்க்க, சர்வதேச சமூகம் நவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சிரியா பிரச்சினைக்கான ஐ.நா தலைமை செயலாளரின் சிறப்புத் தூதர் பெடர்சன் 24ஆம் நாள் சிரியத் தலைநகரான டமாஸ்கஸில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், தற்போது சிரியா பல அறைக்கூவல்களை எதிர்நோக்கி வருகிறது. அதன் நிதானத்தை மீட்சி பெற பன்முகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிரியாவின் அரசியல் நிலைமை, பாதுகாப்பு நிலைமையை உகந்த முறையில் கையாள்வது, அதன் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மீட்டெடுப்பது, அதன் மீதான தடை நடவடிக்கையை நிறுத்துவது, பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்வது, மறுசீரமைப்பு மற்றும் அகதிகள் ஆகிய பிரச்சினைகள் இதில் அடங்கும். தற்போதைய மிக தீரவிமான நிலைமையில் சிரியாவுக்கான உதவியளவைச் சர்வதேச சமூகம் அதிகரிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.