முதலாவது எண்ணியல் பண்பாட்டுச் சுற்றுலா கூட்டம் தொடக்கம்
2024-11-25 10:47:48

முதலாவது எண்ணியல் பண்பாட்டுச் சுற்றுலா கூட்டம் நவம்பர் 23ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தின் வழிகாட்டியாக அறிவியல் தொழில் நுட்பம், பண்பாட்டுச் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு எண்ணியல் உதவும் என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். பண்பாடு மற்றும் சுற்றுலா துறையிலுள்ள எண்ணியல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டு மற்றும் புத்தாக்கத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சீனச் சுற்றுப்பயண நிறுவன சங்கம், சீன நிலவியல் தகவல் தொழில் சங்கம், சீன சுற்று பேருந்து மற்றும் கப்பல் சங்கம், சீன சுற்றுலா காட்சி இடச் சங்கம் முதலியவை இக்கூட்டத்தைக் கூட்டாக நடத்தின. எண்ணியல் பண்பாட்டுச் சுற்றுலா துறை மற்றும் நிபுணர்களுக்கு ஒரு பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு மேடையை இக்கூட்டம் வழங்கியுள்ளது. தவிரவும், இத்துறையின் எண்ணியல் மயமாக்கம் மற்றும் உயர் தரமான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு புதிய உந்து ஆற்றலை இக்கூட்டம் கொண்டு வரும்.