பிரதேசத்திலுள்ள ராணுவ ஏற்பாட்டை வலுப்படுத்துவதற்குச் சீனா எதிர்ப்பு
2024-11-25 16:23:45

தைவான் என்பது சீன உரிமைப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். தைவான் பிரச்சினை சீனாவின் உள்விவகாரமாகும். ஒரே சீனா எனும் கொள்கையில் ஊன்றி நிற்பது தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாப்பதற்கான திறவுகோலாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் அம்மையார் 25ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தைவான் பிரச்சினை என்ற சாக்குபோக்காகக் கொண்டு, தொடர்புடைய நாடுகள் பிரதேசத்திலுள்ள ராணுவ ஏற்பாடுகளை வலுப்படுத்தி பதற்றம் மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்திப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைப்பதைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.