2ஆவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி துவக்கம்
2024-11-26 09:58:58

2ஆவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

விநியோக சங்கிலி சேவை பகுதி, எண்ணியல் அறிவியல் தொழில்நுட்ப சங்கிலி, ஆரோக்கியமான வாழ்க்கை சங்கிலி, பசுமை விவசாய சங்கிலி, நுண்ணறிவு வாகனச் சங்கிலி, தூய்மையான எரிசக்தி சங்கிலி, இப்பொருட்காட்சியில் புதிதாக நிறுவப்பட்ட முன்னேறிய உற்பத்தி சங்கிலி ஆகியவை இப்பொருட்காட்சியில் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய 700 நிறுவனங்கள் இப்பொருட்காட்சியகத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளன.

சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் துணைத் தலைவர் ஜாங் ஷாகாங் கூறுகையில், இப்பொருட்காட்சியில் 620 நிறுவனங்கள் கலந்து கொள்ண்டுள்ளன. இது, முதலாவது பொருட்காட்சியை விட 20 விழுக்காடு அதிகமாகும். முதலாவது பொருட்காட்சியில் 26 விழுக்காட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் இப்பொருட்காட்சியில் 32 விழுக்காட்டுக்காக உயர்ந்துள்ளது. தொழிற்துறை சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புக்கான சர்வதேச சமூகத்தின் தீவிர எதிர்பார்ப்பை இது முழுமையாக காட்டுகின்றது. சீனாவின் வளர்ச்சி மற்றும் இப்பொருட்காட்சியின் மீதான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் நம்பிக்கையை இதுவும் காட்டுகின்றது என்றார்.