சீனாவின் மீது கூடுதலான சுங்கவரி வசூலிப்பு:டிரம்ப்
2024-11-26 15:14:40

அமெரிக்க அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் நவம்பர் 25ஆம் நாள் கூறுகையில்,

ஃபென்டனில் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துகள் அமெரிக்காவில் நுழைந்தன. இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் மீது கூடுதலாக 10 விழுக்காடான  சுங்கவரி வசூலிக்கப்படும் என்றார்.

இது குறித்து அமெரிக்காவுக்கான சீன தூதரகத்தின் செய்திதொடர்பாளர் இணையத்தில் தெரிவிக்கையில்,

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் நன்மை புரியும். வர்த்தகப் போர் அல்லது சுங்கவரி போரில் யாரும் வெற்றி பெற முடியாது என்றார்.