சீன மற்றும் பெரு மனிதப் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை
2024-11-26 15:07:42

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்குச் சென்று ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 31ஆவது தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் பங்கெடுத்து, பெரு நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டதை முன்னிட்டு, நவம்பர் 15ஆம் நாள், சீன ஊடகக் குழுமம் மற்றும் பெரு அரசுத் தலைவர் மாளிகையின் நெடுநோக்கு பரவல் மற்றும் செய்தித் துறை செயலாளர் அலுவலகம், பெரு தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி குழுமமுடன் இணைந்து ஏற்பாடு செய்த சீன-பெரு மனிதப் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை லிமாவில் நடைபெற்றது.

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹை சியோங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், தற்போது உலகின் மிகப்பெரிய, அதிக பன்முகத் தன்மை மற்றும் பரந்த அளவிலான ஒட்டுமொத்த சர்வதேசச் செய்தி ஊடகமான சீன ஊடகக் குழுமம், சீன மற்றும் பெரு மக்களின் மனிதப் பண்பாட்டுப் பாடல்களைத் தொடர்ந்து பாடவும் சர்வதேச பொதுக் கருத்துத் துறையில் பெரு உள்ளிட்ட தெற்குலக நாடுகளின் குரலை அதிகரிக்கவும் விரும்புகின்றது. இதனால், மனித நாகரிகத்தின் தோட்டம் மிகவும் வண்ணமயமானது என்றார்.