காசாவில் போர் நிறுத்தத்திற்கான முடிவுக்கு எதிராக அமெரிக்கா மட்டுமே வீட்டோ செய்தது குறித்து சீனப் பிரதிநிதி உரை
2024-11-26 10:48:16

நவம்பர் 25ஆம் நாள், பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை குறித்து ஐ.நாவின் பாதுகாப்பவை கூட்டம் நடைபெற்றது. ஐ.நாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ ச்சோங் கூறுகையில், கடந்த வாரத்தில் காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கான முடிவுக்கு எதிராக அமெரிக்கா மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதன் காரணமாக, பாதுகாப்பவையின் முயற்சிகள் மீண்டும் தோல்வியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பவையின் தொடர் தாமதம் காரணமாக, அங்கு மேலதிக அழிவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் பாதுகாப்பவை அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் விரைவில் எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நீடித்த போர் நிறுத்தம் ஊக்குவிக்கப்பட வேண்டும். மனிதநேய உதவி காசா பிரதேசத்தில் நுழைவதற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும். இரு நாடுகள் என்ற திட்டத்தின் அடித்தளத்தை அழிக்கும் ஒரு தரப்பு நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டும். மேலும் பரந்த பிரதேச மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.