தைவான் பிரச்சினை அறைகூவல் செய்ய முடியாத முதலாவது சிவப்பு கோடாகும்
2024-11-27 15:23:20

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 16ஆம் நாள் பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் அமெரிக்க அரசுத் தலைவர் பைடனுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். ஷிச்சின்பிங் கூறுகையில், தைவான் பிரச்சினை கடக்க முடியாத முதல் சிவப்பு கோடாகும். தைவான் பிரச்சினையை அமெரிக்கா கவனமாக சமாளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இது குறித்து நவம்பர் 27ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சீன அரசு அவையின் தைவான் பணி பற்றிய அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் சென் பின்ஹுவா கூறுகையில், தைவான் பிரச்சினையில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை எடுத்துக் கூறியுள்ளது. தைவானின் மீதான பணியை மேற்கொள்வதற்கு இது முக்கியத்துவம் அளிக்கின்றது. ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் ஒன்பது இரண்டு என்ற பொது ஒத்த கருத்துக்களில் ஊன்றி நின்று, தைவான் சுதந்திர சக்திகள் மற்றும் வெளிநாடுகளின் தலையீட்டை உறுதியாக எதிர்த்து, பரந்த தைவான் சக நாட்டவர்களுடன் ஒன்றுபட்டு, தைவான் நீரிணையின் இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சி மற்றும் ஒன்றிணைப்பை முன்னேற்றி, தாய்நாட்டின் ஒன்றிணைப்பை மேம்படுத்த வேண்டும் என்றார்.