பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமை சர்வதேச தினத்தின் நினைவுக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-11-27 09:52:29

ஐ.நா சபை 26ஆம் நாள் நடத்திய பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமை சர்வதேச தினத்துக்கான நினைவுக் கூட்டத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அதில் அவர் குறிப்பிடுகையில், பாலஸ்தீன பிரச்சினை மத்திய கிழக்குப் பிரச்சினையின் மையமாகும். போர் உடனடியாக நிறுத்துவது தற்போதைய அவசர கடமையாகும். இரு நாடுகள் என்ற திட்டத்தை பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவது அதற்கான அடிப்படை தீர்வாகும் என்றார்.

தேசத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பாலஸ்தீன மக்கள் மீட்டெடுக்கும் நியாயமான லட்சியத்துக்குச் சீனா எப்போதும் உறுதியாக ஆதரவளிக்கிறது என்றும், பாலஸ்தீனம் ஐ.நாவின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாகுவதற்கும் சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். அண்மை கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் காசா மக்களுக்கு மனித நேய உதவியைத் தொடர்ந்து வழங்கி பாலஸ்தீன பிரச்சினையைக் கூடிய விரைவில் பன்முகமான நியாயமான மற்றும் நிலையான தீர்வு காண்பதை சீனா சர்வதேச சமூகத்துடன் இணைந்து கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.