இஸ்ரேல் மற்றும் லெபனான் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றிய வரவேற்பு
2024-11-27 09:55:56

நவம்பர் 26ஆம் நாள் ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அறிவித்த போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார். இரு நாடுகளின் மக்கள் அனுபவித்த வன்முறை, அழிவு மற்றும் துன்பங்களை இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின் கீழ் செய்யப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக மதித்து உடனடியாக பின்பற்றுமாறும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, ஐ.நா.பாதுகாப்பவையின் 1701ஆவது தீர்மானத்தை முழுமையாக செயல்படுத்துமாறும் இரு தரப்புகளுக்குக் குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. பொது பேரவையின் தலைவர் பிலிமோன் யாங் 26ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அறிவித்த போர் நிறுத்தத்தை வரவேற்றார். மேலும், இப்போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள பல்வேறு தரப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.