டிசம்பரில் வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்கக் கூடும் அமெரிக்க பெட்ரல் ரிசர்வ்
2024-11-27 10:36:46

நவம்ப 6, 7ஆம் நாளில் நடைபெற்ற பெட்ரல் திறந்த சந்தைக் குழுவின் கூட்டத்தின் முடிவுகளை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 26ஆம் நாள் வெளியிட்டது. இக்குழுவின் முன்மதிப்பீட்டின்படி, டிசம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைக்கக் கூடும்.

மேலும், அமெரிக்காவின் வட்டி விகித இலக்கு வரம்பை 25 அடிப்படை புள்ளிகளைக் குறைத்து அதனை 4.5முதல் 4.75விழுக்காடு வரையான வரம்பை எட்டுவதை நவம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது.

இதன்படி, நாணயக் கொள்கையை மேலும் சரிப்படுத்துவது பொருளாதாரம் மற்றும் தொழிலாளர்கள் சந்தையை வலுவாக நிலைப்படுத்துவதற்கு உதவியளிக்கும் என்றும், அதோடு, பணவீக்கத்தின் அளவை மேலும் குறைப்பதற்குத் தொடர்ந்து முன்னேற்றும் என்று அமெரிக்க பெட்ரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.