சீனாவில், மக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களில் இதய நோய் முன்னணியில் இருக்கிறது.
நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் இந்நிலைமை காணப்படுகிறது.
உணவுப் பழக்கத்திலான மாற்றமும், நடைமுறை வாழ்க்கை பாணியிலான மாற்றமும் இதற்குக் காரணமாகின்றன.
கடந்த 22 ஆண்டுக்கால பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, சீன மக்களின் வாழ்க்கை பெரிதும் மேம்பட்டுள்ளது.
அதே வேளையில், பணியிலும் அன்றாட வாழ்க்கையிலும் கூடுதலான அறைகூவலை அவர்கள் சந்திக்க நேரிட்டுள்ளது.
இதய நோய் ஏற்படும் விகிதமும், உயிரைப் பறிக்கும் விகிதமும் அதிகரித்து வரும் போக்கு நிலவுகின்றது. எனவே, இதய நோயாளிகள், முன்கூட்டியே நோய்த்தடுப்பு, நோய் அறிதல், சிகிச்சை ஆகியவற்றுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார், இதய நோய் நிபுணரான பேராசிரியர் GAO RUNLIN.
சத்துணவு உட்கொள்ள வேண்டும், வாழ்க்கையைச் சீரானதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
1 2 3 4 5
|