இரண்டு, காய்கறிகள், மீன் முகலானவற்றை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
மூன்று, பொதுவாக, நல்ல உணவுப் பழக்கம் என்பது, வெறுமனே உணவைக் கொட்டிக் குவிப்பதாக அமையாமல், எளிய உணவாக இருப்பது நல்லது.
நான்கு, தேவைப்பட்டால், சிவப்புத் திராட்சை மதுவை ஓரளவு அருந்தலாம். இது, உடலுக்கு நன்மை தரும்.
ஐந்து, புகை பிடிப்பதைக் கைவிட வேண்டும்.
ஆறு, முறையாக, நாள்தோறும் உடற்பயிற்சி செய்திடல் வேண்டும்.
ஏழு, இவை அனைத்துக்கும் மேலாக, நல்லதையே எண்ணும் மனப்பக்குவம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் நன்று.
இதய நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு இவை சிறந்த வழிமுறைகளாகும் என்கிறார் GAO.
மருத்துவர்தம் அறிவுரையை ஏற்றுப் பின்பற்றினால், இதய நோய் நாம் விரட்டியடிக்கலாம். அது, நம்மை நெருங்கிடாமல் தடுக்கலாம். 1 2 3 4 5
|