சிகிச்சைக்குப் பிறகு பணிக்குத் திரும்புவதற்கும், அன்றாட இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கும் இதய வோயாளிகளுக்கு உதவும் புதிய சிகிச்சை முறைகளை அவர் எடுத்துக் கூறி வருகின்றார்.
கடந்த சில ஆண்டுகளில், இதய நோய் அதிக அளவில் ஏற்பட்டதுடன், அதனால் பாதிக்கப்படுவோரின் வயது குறைவானதாகவும் இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
1988க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில், சீனாவின் நகரங்களில், இதய நோயால் இறந்தோரின் விகிதம், ஆண்டுதோறும் சராசரியாக 2 விழுக்காடு அதிகரித்துள்ளது. 1996இல், ஒரு லட்சம் பேருக்கு 80 பேர் என்ற உயர்நிலை காணப்பட்டது.
அதே வேளையில், சீனக் கிராமப்புறங்களில், இந்த அதிகரிப்பு விகிதம் ஆண்டுக்கு 1.5 விழுக்காடாக இருந்துள்ளது.
வடக்கு மற்றும் வடகிழக்கு சீனாவில், இதய நோய்க்கு ஆளாவோர் அதிகம். இதில், பெய்ஜிங் முதலிடம் வகிக்கிறது என்கிறார் GAO.
இந்நோய்க்கான பொதுவான அறிகுறியானது Angina ஆகும். உடலுழைப்பின் போது இது ஏற்படலாம். அமுக்கம், இறுக்கம், இழுத்துப் பிடித்தல் என்பன, மார்பகத்தின் நடுப்பகுதியில் 3 முதல் 5 மணித்துளி வரை ஏற்படலாம். வலியானது, இடது கையின் கீழ்ப்பகுதி வரையிலும், கழுத்து வரையிலும் அல்லது முதுகு வரையிலும் பரவக் கூடும்.
சற்றே ஓய்வெடுத்தால், இந்த Angina ஓடிப் போய்விடும்.
1 2 3 4 5
|