பை-பாஸ் அறுவை சிகிச்சையானது, பொதுவாக, ஏற்றதோர் சிகிச்சை முறை என, முன்னர் கருதப்பட்டது. ஆனால், நோயாளிகள் அதிக வலியைப் பொறுத்துக் கொள்ள நேரிடுகிறது. அவர்கள், இயல்பு நிலைக்குத் திரும்ப, அதிக நேரம் பிடிக்கிறது.
தலையிட்டுச் சிகிச்சை முறை என்பது, இதற்கு நேர் மாறானது. நோயாளியின் குருதிக் குழாயில், ஒரு குழலை மருத்துவர் பொருத்துவார். பின்னர், எக்ஸ்ரே போன்றவற்றின் துணையுடன், சிகிச்சை தொடரும்.
தற்போது, 50 முதல் 60 விழுக்காடுவரையான இதய நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வுத்தி முறை பற்றிய ஆராய்ச்சி தொடருமேயானால், இவ் விழுக்காடு மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஆயினும், இந்த சிகிச்சை முறையிலும் குறைபாடு இல்லாமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4 இலட்சம் ரூபாய், இதற்குச் செலவாகிறது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை விட, இது கூடுதலாக இருக்கிறது என்பது ஒரு குறைபாடு.
இத்தகைய நவீன சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், உணவும் பழக்கத்தில் மக்கள் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம் என்கிறார் காவ்.
அவரது பரிந்துரைகளில் சில பின்வருமாறு—
ஒன்று, இறைச்சி, முட்டை, முதலான கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்புச்சத்து நிறைந்தவற்றை மக்கள் குறைவாக உண்ண வேண்டும்.
1 2 3 4 5
|