உள்மங்கோலியப் புல்வெளியில் பிறந்த தெ தெ மா, வீறார்ந்த குரல் படைத்த பாடகியாவார். எழில் மிக்க புல் வெளி என் வீடு, புல் வெளியிலிருந்து வருகிறேன் ஆகிய பாடல்களால், புல்வெளியின் இரவுப் பறவை என அவர் பெயர் பெற்றார். ஆயர் குடும்பத்தில் அவர் பிறந்தார். பெற்றோர், புகழ் பெற்ற உள்ளூர் பாடகர்களாவர். அழகான மேய்ச்சல் நிலம், தெ தெ மாவுக்கு குரல் வளத்தை வழங்கியுள்ளது. 13வது வயதில், உள்ளூர் கலைப் பிரச்சாரக்குழுவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்குப் பின், உள் மங்கோலிய கலைப்பள்ளியில் சேர்ந்தார்.
1 2 3 4 5
|