• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-29 15:36:33    
மங்கோலிய இனப் பாடகி தெதெமா

cri

1964ல் முதலாவது தொகுதி சிறுபான்மை இன மாணவர்களில் ஒருவராக, சீன இசைக்கல்லூரியில் தேசிய இன இசையை முறைப்படி பயில துவங்கினார். கல்லூரிப் படிப்பை முடித்த பின், உள்மங்கோலியா திரும்பி, பாடகியானார். 1982ல் அவர் பெய்ஜிங் வந்து, சீனாவின் சீன மத்திய தேசிய இன இசை நடனக் குழுவில் சேர்ந்து, தனிப் பாடகியாக மாறினார். பல்வகை இசைப் போட்டிகளில் அவர் பரிசு பெற்றுள்ளார். அவர் பாடிய பாடல்கள், மக்கள் விரும்பும் புகழ் பெற்ற பாடல்களாக மாறியுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள்-பிரதேசங்களுக்குச் சென்று பாடி, தாய்நாட்டுக்குப் புகழ் சேர்த்திருக்கிறார். மிகப் பல நேயர்கள் அவரை நேசிக்கின்றனர். சீன மத்திய தேசிய இன இசை நடனக் குழுவானது, பல தேசிய இனங்களை உள்ளடக்கிய குழுவாகும். உள்மங்கோலியாவின் சார்பில் இக்குழுவில் இடம் போற்றதால், மங்கோலியப் பாடல் வட்டாரங்களைச் சேர்ந்தோரும் நேயர்களும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், இந்த வாய்ப்பை பெரிதும் பேணிமதிக்கிறேன் என்றார் அவர். ஒருமுறை கடும் நோயினால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார்.

1  2  3  4  5