குவாங்சோவிலும் பெய்ஜிங்கிலும் இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது தமது விருப்பமாகும் என்றும் அவர் கூறினார். தெ தெ மாவின் கணவர் ராசிநிமா, அவருடைய சக ஊழியராவார். தெ தெ மாவுக்கென மனைவிக்கென, மங்கோலிய மொழிப் பாடல்களை அவர் சீன மொழியாக்கம் செய்கிறார். மனைவி அடிக்கடி வெளியூரில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், குடும்பப் பொறுப்பை முகம் சுளிக்காமல் அவர் ஏற்கிறார். குறிப்பாக, தெ தெ மா நோய்வாய்ப்பட்ட போது, நன்றாக கவனித்துக் கொண்டார். இதன் விளைவாகத் தான், தெ தெ மா மீண்டும் மேடைக்குத் திரும்ப நேர்ந்தது. 1 2 3 4 5
|