
விவசாயி குடும்பத்தில் பயணிகள் தங்கியிருந்து உணவு உண்டு, குடும்பத்துடன் ஒன்று கூடி மகிழ்ந்து, வாழ்க்கையை அனுபவிக்கலாம். இமாக்குலி என்பவள், அழகிய உய்கூர் நங்கை ஆவாள். கோடைகாலத்திலும் இலையுதிர்காலத்திலும், பயணிகள், அதிக எண்ணிக்கையில் அவளுடைய வீட்டுக்கு வருகை தருகின்றனர். பயணிகளுக்காக நடனமாடுவதாக, அவள் கூறினாள். விருந்தினருடன் சேர்ந்து, நாங்கள் நடனமாடுகிறோம். தாய்தந்தையர், அக்கா அண்ணன் தங்கை ஆகியோரும் நடனத்தில் கலந்து கொள்வர் என்றாள். துருஃபான், சீனாவில் புகழ் பெற்ற திராட்சை ஊராகும். ஆண்டுதோறும் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகள் பலர் இங்கே வருகை தந்து, புத்தம் புதிய திராட்சை, உலர் திராட்சை, திராட்சை மது ஆகியவற்றைச் சுவைக்கின்றனர்.
1 2 3 4 5
|